"இனி பியர் பாட்டிலில் இல்லை.. பவுடரில்".. உலகிலேயே இதுதான் முதன்முறை..!
ஜெர்மனியை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம், பவுடர் வடிவில் பியர் மதுவை உருவாக்கியுள்ளது. ஒரு ஸ்பூன் பவுடரை தண்ணீரில் கலந்தால், சிறிது நேரத்தில் நுரை ததும்ப ததும்ப பியர் தயாராகி விடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பவுடர் வடிவில் பியர் இருப்பதால், எடை குறைவாக இருப்பதோடு, அதிக அளவை எளிதாக கொண்டு செல்ல முடியும். இதன் மூலம், கார்பன் டை ஆக்சைடு வெளியாவது பாதிக்கும் கீழ் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக இதற்கான ஆயவு நடைபெற்று வருவதாகவும், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.