போதையில் தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி பிள்ளைகள் கையாலே நடந்த பயங்கரம்

Update: 2022-11-09 09:27 GMT

போதையில் தூங்கி கொண்டிருந்த கணவன் - மனைவி பிள்ளைகள் கையாலே நடந்த பயங்கரம்

வேப்பூர் அருகே தூங்கி கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவியும் அவரது மகன், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுபோதையில், அவரது மனைவி தீபாவுடன் சண்டையிடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகத்தின் உறவினரான மாலதி, அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தனது மகனையும் மகளையும் திட்டியுள்ளார். இதனையடுத்து தீபா, தனது மகன், மகளோடு சேர்ந்து, போதையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, தீபாவையும், அவரது மகள் மற்றும் மகனையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்