"கார்ல வேகமா வந்து அநியாயமா என் புள்ளைய கொன்னுட்டீயே டா பாவி" - அழுதுகொண்டே அடி பொளந்தெடுத்த தந்தை
சென்னை அம்பத்தூரை அடுத்த புதூர்மார்க்கெட் அருகில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு மருந்தகத்தில் மருந்து வாங்க சென்றனர். அப்போது ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணதாசன் மற்றும் முகமது சுனில் மீது, அதிவேகமாக சாலையில் வந்த கார் ஒன்று மோதியது. அதே வேகத்தில், மின் கம்பத்தில் மோதியபடி நின்றது. இதில் முகமது சுனில் உயிரிழந்தார். கண்ணதாசன் படுகாயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த ஜார்ஜ் மில்லர் என்பவரை அப்பகுதி பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.