கோயிலுக்கு வரி கொடுக்காததால் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்ட குடும்பம் - RDO செய்த செயல்
சாத்தான்குளம் அருகே, கொடை வரி கொடுக்காததால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பத்தினரை, சமாதானம் செய்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் ஊர் மக்களுடன் சேர்த்து வைத்தார். வீரகசக்கம்மாள் கோயில் கொடைக்கு வரி கொடுக்காததால், காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் குடும்பத்தினரை, ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், காந்திநகர் பகுதிக்கு சென்ற திருச்செந்தூர் கோட்டாட்சியர், ஊர் தலைவர், பொதுமக்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர், கனகராஜ் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி ஊர் மக்களுடன் சேர்த்து வைத்தார்.