போலி- மின்ரசீது முறைகேடு... பொது சேவை மையத்திற்கு சீல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி
செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் பிரபு என்பவர் பொது பொது சேவை மையம் நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வரும் பொது மக்களிடம் இருந்து பணத்தை பெற்ற பிரபு, அந்த பணத்தை அரசுக்கு செலுத்தாமல், போலி மின்-ரசீது கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட மின்-ரசீதுகளை ஆய்வு செய்யும் போது பிரபு அனுப்பிய அனைத்தும் போலியானது என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து பிரபுவின் கடைக்கு சென்ற அதிகாரிகள் அங்கு இருந்த இயந்திரங்களை பறிமுதல் செய்து போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர், பொது சேவை மையத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நிலையில், பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.