போலி ஜாதிச் சான்றிதழ்... சிபிஎம் எம்எல்ஏ-வின் பதவி ரத்து..! - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதில் வெற்றி பெற்ற ஏ.ராஜா பொய்யான ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து தேர்தலில் போட்டியிட்டதாக யு.டி.எஃப் வேட்பாளர் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பட்டியலின இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதை மறைத்து பொய்யான சான்றிதழ் சமர்ப்பித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தேவிகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏ.ராஜா பட்டியல் இன இடஒதுக்கீட்டிற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
இந்த உத்தரவு குறித்து அரசிதழில் அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.