உங்களுக்கு பேஸ்புக்ல அக்கவுண்ட் இருக்கா...? FACEBOOK உங்க கிட்ட எப்படி வந்துச்சுன்னு தெரியுமா...?

Update: 2023-02-04 06:44 GMT

தற்போது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் பேஸ்புக் உபயோகிப்பாளர்களாக உள்ளனர். அதாவது சுமார் 200 கோடி பேர் பேஸ்புக்கின் கணக்கு தொடங்கி, பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தகைய பிரம்மாண்டமான சமூக ஊடகமாக அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக், 2004ல் மிகச் சிறிய வலைதளமாக தனது பயணத்தை தொடங்கியது ஆச்சர்யம் அளிக்கும் தகவல்.

கல்லூரி மாணவர்கள், தங்களின் தகவல்கள், புகைபடங்களை பரிமாரிக் கொள்ள வகை செய்யும் எளிய வலைதளமாக இதை 2004ல் மார்க் சூக்கர்பர்க் தனது விடுதி அறை தோழர்களுடன் தொடங்கினார்.

2004ல் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் பொறியியல் படித்த மார்க் சூக்கர்பர்க்கிற்கு அப்போது19 வயது தான். கம்யூட்டர் சாஃப்ட்வேர் எழுதுவதில் இளம் வயதிலேயே அசாத்திய திறமை பெற்றிருந்தார்.

மாணவர்களின் புகைபடங்கள் மற்றும் விலாசங்கள் அடங்கிய முகநூல் என்றே இதை அன்று ஹார்வார்ட் மாணவர்கள் அழைத்தனர். மார்க் இதை தொடங்கிய ஒரு வாரத்தில், இதை தங்களின் வலைமனையை பார்த்து காப்பியடித்ததாக மூன்று ஹார்வார்ட் மாணவர்கள், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

பேஸ்புக் நிறுவனம் வளர்ச்சியடைந்த பின், இவர்கள் மூவருக்கும் 2 கோடி டாலர் தொகை மற்றும்12 லட்சம் பேஸ்புக் பங்குகள் அளித்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பேஸ்புக் அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியதும், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து பாதியில் வெளியேறிய மார்க் சூகர்பர்க், முழு நேர தொழிலதிபராக உருவெடுத்தார்.

2004 ஜூனில் கலிபோர்னியாவின் பாலோ அல்டோவிற்கு பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகம் மாற்றப்பட்டது. கல்லூரி மாணவர்களை தொடர்ந்து, பல்வேறு பிரிவினரும் பேஸ்புக்கை பயன்படுத்த தொடங்கினர்.

2005 டிசம்பரில் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரித்து. இதைத் தொடர்ந்து வெஞ்சர் கேபிடல் நிறுவனங்கள் பல கோடி டாலர்களை பேஸ்புக்கில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

பேஸ்புக் பங்குகள் விலை வெகுவாக அதிகரித்ததால் பெரும் கோடீஸ்வராக மாறிய மார்க் சூகர்பர்க், உலக பணக்கார்கள் வரிசையில் தற்போது 13ஆம் இடத்தில் உள்ளார்.

உலகின் மிகப் பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

Tags:    

மேலும் செய்திகள்