ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மனைவியை கீழே தள்ளிவிட்டு கொன்ற கணவன் - பின்னாடியே ஃபாலோ செய்து நிகழ்த்திய பயங்கரம்

Update: 2023-03-29 08:07 GMT
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மனைவியை, கணவன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா. இவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு பூமா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
  • இதில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளனர்.
  • இந்நிலையில், படப்பை அருகே டைல்ஸ் ஓட்டும் பணி செய்து வந்த சுந்தர் என்பவருடன் பூமா தேவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
  • இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆண் நண்பர் சுந்தருடன், பூமா தேவி இரு சக்கர வாகனத்தில் செல்வதை கண்ட சிவா ஆத்திரமடைந்துள்ளார்.
  • இதில், அவர்களை பின் தொடர்ந்து சென்ற சிவா, இரு சக்கர வாகனத்தில் இருந்து மனைவியை கீழே தள்ளி விட்டதில், பூமா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இந்த சம்பவத்தில் பூமாதேவியின் கணவர் சிவாவை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்