தேசிய கீதத்திற்கு நிர்வாகிகள் குத்தாட்டம்... விழி பிதுங்கி நின்ற முதலமைச்சர் - "இவங்கள யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கய்யா"
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலட் முன்னிலையில் தேசிய கீதத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் நடனம் ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் பகுதியில் உள்ள மகர்டா கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் அசோக் கேலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அசோக் கேலட் முன்னிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமிலா காடியா, மாவட்ட தலைவர் ரேஷம் மால்வியா மற்றும் இதர காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் தேசிய கீதத்திற்கு நடனம் ஆடியதை தடுத்த நிறுத்தாத அசோக் கேலட்டின் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அன்னிய மண்ணில் இந்தியாவை அவமதித்து வரும் நிலையில், அசோக் கேலட் உள்நாட்டிலேயே தேசிய கீதத்தை அவமதிப்பதாக வும், நாட்டின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அதனை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜக விமர்சித்துள்ளது.