காதலியின் திருமணத்தை நிறுத்த மணமகன் ஊரில் கேவலம் செய்த Ex காதலன்

Update: 2023-06-25 06:51 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த வடிவரசன் என்ற இளைஞர் ஜே.சி.பி. ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், வடிவரசன் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை ஓராண்டிற்கு மேலாக காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து, அந்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், வடிவரசன் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வாழ்த்து போஸ்டராக அடித்து, அந்த பெண்ணின் கிராமத்திலும், மணமகன் கிராமத்திலும் ஒட்டியுள்ளார். போஸ்டர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, வடிவரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலிக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்த, காதலன் செய்த செயல் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்