"நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் " மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்..
ஜந்தர் மந்தரில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள், தங்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், மல்யுத்த வீரர்கள் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். இதனிடையே, கருப்பு தினத்தில் இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என, மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏராளமானோர் வருகை தர இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.