"பார்வை கைவிட்டாலும் உழைப்பு என்னை கை விடாது" | உத்வேகம் தரும் பார்வையற்ற மெக்கானிக் | MECHANIC

Update: 2022-12-18 10:47 GMT

தெலுங்கானாவில் அடுத்தடுத்து விபத்துகளில் இரு கண்களிலும் பார்வை இழந்தாலும் தன்னம்பிக்கையை விடாதவர், மெக்கானிக் வேலை செய்து குடும்பத்தை வழிநடத்தி வருகிறார்.

தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியை சேர்ந்த ஹபீஸ் என்பவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் 2003ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதில் இடது கண் பார்வையை இழந்துள்ளார். தொடர்ந்து 2005ம் ஆண்டு பட்டாசு வெடித்த விபத்தில் வலது கண் பார்வையையும் இழந்துள்ளார். கண் பார்வையை முழுவதுமாக இழந்த ஹபீஸ், குடும்பத்தின் தேவைக்காக மீண்டும் மெக்கானிக் வேலையை செய்ய தொடங்கியுள்ளார். ஹபீஸ் பார்வையற்றவர் என்பதால் ஆரம்பத்தில் நம்பிக்கையில்லாமல் அவரை சிலர் தவிர்த்துள்ளனர். எனினும், தன்னம்பிக்கையால் ஒருசில வாகனங்களுக்கு பழுது பாரத்து வந்த ஹபீஸ், தற்போது அந்த பகுதியின் அடையாளமாக மாறியுள்ளார். பார்வை இழந்தாலும், தன் மீதும், தனது உழைப்பு மீதும் நம்பிக்கை வைத்துள்ள ஹபீஸ் அப்பகுதியின் சிறந்த மெக்கானிக்காக வலம் வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்