சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளர் படம் இல்லை.. கொடி, சின்னம் இல்லை... மநீம கட்சியினர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம்
- இடைத்தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து பரப்புரை செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர், வேட்பாளர் படம், சின்னம் எதையுமே பயன்படுத்தாமல் வித்தியாசமாக பேரணியில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் 19ஆம் தேதி கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
- இந்நிலையில், ஈரோடு காந்திஜி ரோடு பகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
- 2 கிலோ மீட்டருக்கு நடைபெற்ற பேரணியில், அனைவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகளை மட்டுமே வைத்திருந்தனர்.
- வேட்பாளரின் படமோ, சின்னமோ, காங்கிரஸ் கொடி எதையுமே பயன்படுத்தாமல் வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.