திருமணம் முடிந்த கையோடு வந்து அரசுத் தேர்வெழுதிய மணமகள் - ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம் | viral video

Update: 2022-12-04 12:06 GMT

கிராம உதவியாளருக்கான தேர்வில் மணக்கோலத்தில் வந்து மணமகள் தேர்வெழுதிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிணி. பிகாம் பட்டதாரியான இவருக்கும் வினோத்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அரசு வேலைக்கு முயற்சித்து வந்த ஹரிணி கிராம நிர்வாக உதவியாளருக்கான தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தார். சரியாக திருமணம் நடைபெறும் நாளன்று தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மணமகன் வினோத்குமார் உட்பட குடும்பத்தினரிடம் தேர்வு எழுத வேண்டும் என மணமகள் ஹரிணி விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணம் முடித்த கையோடு மணமகன் வினோத்குமார் மனைவி ஹரிணியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். மணக்கோலத்தில் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வெழுதிய மணமகள் ஹரிணியைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இதே போன்று தேர்விற்கு கால தாமதமாக வந்த மணப்பெண் சங்கமித்ரா என்பவரை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்காததால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்