ஓபிஎஸ், இபிஎஸ்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு யாருக்கு? மக்களின் ஓப்பன் டாக்

Update: 2023-01-22 02:25 GMT

Full View


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்த கருத்துகள்.


"அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளது"

"ஈபிஎஸ் அறிவிக்கும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார்"

"ஓ.பன்னீர்செல்வம் அணியால் எந்த பாதிப்பும் இல்லை"


"ஓ.பன்னீர்செல்வம் அணியும் இடைத்தேர்தலில் நிற்கட்டும்"

"நாங்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே ஆதரிப்போம்"



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயர் மிக விரைவில் வெளியிடப்படும் என மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் கொண்டுவராவ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் . இதில் மூத்த நிர்வாகிகளான தங்கபாலு , ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் பெயரை எப்போது அறிவிப்பது, வெற்றி வாய்ப்பு நிலவரம் , தேர்தல் பணி உக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினேஷ் குண்டு ராவ் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தமிழக முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் வேட்பாளர் பெயர் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சின்னம் கிடைக்கப்போவதில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ்-உம் போட்டியிடப்போவதாக கூறியுள்ளதால் எடப்பாடி பழமிசாமிக்கு சின்னம் கிடைக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், அவர்களது சின்னமே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு தான் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.



டிடிவி தினகரன், பொதுச்செயலாளர் அமமுக -  "இடைத்தேர்தலில் பழனிசாமிக்கு சின்னம் கிடைக்கப்போவதில்லை"

"ஓபிஎஸ்-உம் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்"

"அவர்கள் பணத்தைக் கொண்டு தான் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்"

"அவர்களது சின்னமே 2000 ரூபாய் நோட்டு தான்"


Tags:    

மேலும் செய்திகள்