ஓபிஎஸ் குறித்த கேள்வி - ஈபிஎஸ் சொன்ன பதில்
ஓபிஎஸ் குறித்த கேள்வி - ஈபிஎஸ் சொன்ன பதில்
அதிமுக வங்கி கணக்குகளை முடக்க வேண்டுமென ஓபிஎஸ் கடிதம் எழுதியது தொடர்பாக, வழக்குகள் முடிந்த பிறகு பதிலளிக்கப்படும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியிலுள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். அப்போது அதிமுகவின் வங்கி கணக்கை முடக்க வேண்டுமென ஓபிஎஸ் கடிதம் எழுதியிருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் அதுகுறித்து பதிலளிக்க முடியாது எனவும், வழக்குகள் முடிந்த பிறகு அதுபற்றி கருத்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.