எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் | KN Nehru | EPS | Thanthi TV
- எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
- வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என,
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
- அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் முதலமைச்சர்' சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் என, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
- அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் அதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததே…. அதுபற்றி பழனிசாமி அவர்களுக்குத் தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- அன்றைக்கு நடந்தது தமிழ்நாடு முழுமைக்கான ஆலோசனைக் கூட்டம் என்றும், அதில் தான் ''பருவ மழையை எதிர் கொள்ள முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும், உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்'' என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால், 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மாநகரில் மட்டும் 289பேர் மரணம் அடைந்தது நினைவிருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் நேரு,
- தேர்தல் வரப்போகிறது தினசரி அறிக்கை விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.