ஈபிஎஸ் மறைத்த விஷயம் - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு |

Update: 2023-04-28 02:23 GMT

வேட்பு மனுவில் முறைகேடு செய்ததாக, ஈபிஎஸ்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 தேர்தலில், வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைத்த‌தாக, சேலம் மாவட்ட எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட்ட அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரிவான விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கில் குற்றப்பத்திரிகையை 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கை தொடர்ந்த மிலானிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்