"ஓபிஎஸ் பக்கம் வந்த ஈபிஎஸ்"... "மூக்கை நுழைக்கும் சசிகலா" - திகில் கிளப்பிய ஜெயக்குமார், JCD பிரபாகர்
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என இடையே வெடித்த மோதலை அடுத்து, நடந்த விவகாரம் வழக்காக உச்சநீதிமன்றம் சென்றது.
பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாளையொட்டி, அதிமுகவின் நகர்வுகள் கவனிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி...
அப்போது 106 கிலோ எடையிலான கேக்கினை வெட்டி, அதிமுக நிர்வாகிகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார்
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய கட்சி தொண்டர்கள் உறுதியேற்போம் என டுவிட்டரில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி...
மாநிலம் முழுவதும் தொண்டர்கள் எம்ஜிஆர் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா சாலையில் எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான கேள்விக்கு, தான் சர்வாதிகாரி இல்லை என்றும், அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றும் தெரிவித்தார்.
தி.நகரில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய சசிகலா, நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்திக்க திட்டம் உள்ளதாக குறிப்பிட்டார்.
சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர், ஓபிஎஸ் பக்கம் பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கிறார் எனக் கூறுவதற்குப் பதிலாக, ஓபிஎஸ் பக்கம் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என கூறியதால், சிரிப்பலை எழுந்தது
இதற்கிடையே பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.