"Zoho-ல் பெரும்பாலான பணிகளுக்கு ஆங்கிலம் அவசியமில்லை" ஸ்ரீதர் வேம்பு ட்வீட் | ZOHO | Sridharvembu

Update: 2023-04-06 15:16 GMT

அசாம் முதல்வரின் ட்வீட்டைப் பகிர்ந்து பதிலளித்துள்ள zoho நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, தன் சார்பாகவும் கிண்டல் செய்வோருக்கு பதிலடி கொடுத்துள்ளார்... தனது ஐடி நிறுவனத்தில் பெரும்பாலான பணிகளுக்கு ஆங்கிலம் அவசியம் இல்லை என தெரிவித்த அவர், இந்தியாவில் சரளமாக ஆங்கிலம் பேச, படிக்க, எழுத தெரியாவிட்டால் அவர்களை முட்டாள்கள் என கருதுவதாகக் குற்றம் சாட்டினார்... மேலும், அந்த ஆங்கில மோகத்தில் இருந்து விடுபடும் போது தான் நாம் முன்னேற முடியும் எனவும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். அத்துடன் zohoவில் பெரும்பாலான பணிகளுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்