அடிப்படை வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள்... அதிரடி திட்டம் போட்ட அண்ணா பல்கலை.,

Update: 2023-02-07 03:11 GMT

தமிழகத்தில் உள்ள 425 பொறியியல் கல்லூரிகளில், 200 கல்லூரிகள் மட்டுமே தரமானவையாக இருப்பதால், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், குறைந்த மாணவர்கள் படிக்கக்கூடிய, அடிப்படை வசதிகள் குறைவான பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை, அருகில் உள்ள மற்ற கல்லூரிகளுக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முடிவானது, பல தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்