யாரையும் Distrub பண்ணாம சாலையை கடந்த யானை கூட்டம்... Wait பண்ணி சென்ற வாகனங்கள்

Update: 2023-04-30 09:34 GMT

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் அருகே, தேசிய நெடுஞ்சாலையை காட்டு யானைக்கூட்டம் கடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள், வறட்சி காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பண்ணாரி அம்மன் கோ​யில் அருகே, 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்