'க்யூட் எலிபன்ட் ஃபேமிலி' 20 நாட்களாக குன்னூரில் முகாம் | Elephant Family | Conoor | Nilagiri
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 20வது நாளாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குன்னூரில் சமவெளி பகுதிகளில் இருந்து குட்டிகளுடன் வந்த 9 காட்டு யானைகள், குன்னுாரில் கடந்த 20 நாட்களாக முகாமிட்டுள்ளது. சாலையை கடந்து செல்லும் இந்த யானைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டத்தில் உணவை தேடி செல்கிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.