50 வீடுகள் சூறை... கோரதாண்டவம் ஆடிய மக்னா யானை - கொட்டத்தை அடக்கிய வனத்துறை
50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய PM 2 மக்னா யானை, கேரளாவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக PM 2 மக்னா யானை 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பேரை தாக்கி கொன்றது. இதையடுத்து, கடந்த மாதம் இந்த யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. எனினும், இந்த யானை மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்ததை தொடர்ந்து, தமிழக வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் கேரள வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், கேரளா மாநிலம், முட்டாகாடு என்ற இடத்தில், கேரள வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர். மேலும், இந்த யானையை முத்தங்கா பகுதியில் உள்ள யானைகள் பராமரிப்பு முகாமிற்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்துள்ளனர்.