வாக்காளர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்

வாக்காளர்களுக்கு அதிரடி உத்தரவு போட்ட தேர்தல் ஆணையம்

Update: 2022-07-09 03:40 GMT

அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைப்பது தொடர்பான, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை, 'சிக்ஸ் - பி' என்ற விண்ணப்பத்தின் மூலம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து, ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்