அட்சய பாத்திரம் திட்டம் குறித்து பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு..!
அட்சய பாத்திரம் திட்டத்தை குறை சொல்லவில்லை, அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆண்டவனாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.ஆளுநர் செலவுக்கு ஒதுக்கப்படும் நிதி மேலாண்மை குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பேரவையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது, கடந்த ஆட்சியில் கொள்கை முடிவு எடுக்கப்படாமலும், அமைச்சர் கையெழுத்து போடாமலும் ஆளுருக்க ஒதுக்கப்பட்ட தொகையில் அட்சய பாத்திரம் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று கூறினார். அப்போது பேசிய எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, அட்ச பாத்திரம் திட்டத்தை ஆளுநர் சொல்லி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்ததாக தெரிவித்தார். அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அட்சய பாத்திரம் திட்டத்தை குறை சொல்லவில்லை என்றும், நிதி ஒதுக்கியதில் குளறுபடி இருப்பதைத்தான் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார்.