சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,15 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.