மணிப்பூர் பெண்கள் குறித்த வீடியோவை பகிர வேண்டாம் என, சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் குறித்த வீடியோ காட்சிகளை, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், இந்திய விதிகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தற்போது வைரலாகியுள்ள மணிப்பூர் பெண்கள் தொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் எனவும், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.