‘இந்தியா’வை எதிர்க்க தைரியம் உள்ளதா? – பாஜகவுக்கு சவால் விட்ட மம்தா

Update: 2023-07-19 02:15 GMT

பாஜக அரசின் ஒரே வேலை, அரசுகளை விலைக்கு வாங்குவது மட்டுமே என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "NDA கூட்டணியால் 'I.N.D.I.A'-வுக்கு சவால் விட முடியுமா..என கேள்வி எழுப்பினார். மேலும் தாய்நாட்டை நேசிப்பதால் நாங்கள் தேச பக்தர்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்