"இதை உடனே செய்யுங்கள்" - தமிழக அரசுக்கு ஈ.பி.எஸ். வலியுறுத்தல் | Edappadi Palanismy | ADMK

Update: 2023-06-08 11:27 GMT

கோடை மழை மற்றும் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில், சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், பலா, தேக்கு போன்ற மர வகைகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சேதமடைந்த முருங்கை மரங்களையும், பிற மாவட்டங்களில் சூறைக்காற்றில் சேதமடைந்த பயிர்களையும் அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்