திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழா - முன்னின்று நடத்தி வைத்த துர்கா ஸ்டாலின்..!
சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழா நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
டெல்டா மாவட்ட மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றதால், முதல்வரால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.