"தி.மு.க குடும்ப கட்சிதான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு | Cm Stalin | DMK
பா.ஜ.க கொள்கைகளை திணிக்கவே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை இயக்குனரும், துர்கா ஸ்டாலின் சகோதரருமான மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி-யின் இல்ல திருமணத்தை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடத்தி வைத்து, மணமக்களுக்கு ஆசி வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் வள்ளலாரை பற்றி ஒருவர் உளறிக் கொண்டிருப்பதாக, ஆளுநரை, முதலமைச்சர் மறைமுகமாக விமர்சித்தார்.