சமூக ஆர்வலரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி.. போலி பட்டா விவகாரத்தில் மோதல் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ...

Update: 2023-04-21 14:17 GMT

பாவூர்சத்திரம் அருகே கோட்டாட்சியர் முன்னிலையில் சமூக ஆர்வலரை திமுக நிர்வாகி தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...சமூக ஆர்வலரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி.. போலி பட்டா விவகாரத்தில் மோதல் - இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ...

தென்காசி மாவட்டம் ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்துவரும் செந்தூர் பாண்டியன் என்பவர், போலி பட்டா மாறுதலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு புகார் அளித்திருந்த நிலையில், தென்காசி கோட்டாட்சியர் கெங்காதேவி மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவரும், திமுக நிர்வாகியுமான சுப்பிரமணியம் என்பவர் கிராம நிர்வாக அலுவலருக்கு சார்பாக பேசியதோடு மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். இது குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்