சரவெடிக்கு மாற்றாக, குப்பைகள் சேராமல், 2 நிமிடங்களுக்கு மேல் பல வண்ணங்களில் வெடிக்கும் புதிய ரக வெடிகள் சிவகாசியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என அறிவித்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சிவகாசி வட்டாரத்தில் உள்ள பட்டாசு கடைகளில் சரவெடி பட்டாசுக்கு மாற்றாக கலர் மேஜிக் விப் என்ற பெயரில், கிராக்லிங் வாலா மற்றும் டிஜிட்டல் லார் என்ற புதிய ரக
வெடிகள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த வெடிகளின் திரியில் தீயை பற்ற வைத்தவுடன், 2 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து வெடித்து, பல வண்ணங்களில் வெடிக்கும் என்றும், குப்பை ஏதும் சேராது என்றும்
விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த புதிய வகை பட்டாசை, சரவெடி பிரியர்கள் ஆர்வத்தோடு விரும்பி வாங்கிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்