மின்வெட்டு நேரத்தில் நடந்த பிரசவம்.. அரசு மருத்துவமனையின் அவலம்..அதிர்ச்சியில் உறவினர்கள்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் தொடர் மின்தடையால், யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் தொடர் மின்தடையால், யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், காலில் பலத்த காயத்துடன் வந்த ஒருவரை, மருத்துவர்கள் இல்லாததால், கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தனர். தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.