திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஆடு, மாடுகளை திருட வந்த இளைஞரை, பொது மக்கள் மடக்கி பிடித்து, மரத்தில் கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மணியக்காரன்பட்டி தோட்டத்து பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகளை, இளைஞர் ஒருவர் திருட வந்துள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்த கிராம மக்கள், அவரை மரத்தில் கட்டி வைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், கேரள மாநிலம் கொள்ளம் பகுதியை சேர்ந்த முகமது பைசல் என தெரிய வந்தது.