மனைவியின் தங்கையுடன் 2வது திருமணம்...தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய மகன்கள்
மனைவியின் தங்கையுடன் 2வது திருமணம்...தந்தை, சித்தியை சரமாரியாக வெட்டிய மகன்கள் | Dindigul
இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தந்தையையும் இரண்டாவது மனைவியையும் அரிவாளால் வெட்டிய இரண்டு மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலங்குண்டை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இவருடைய மனைவி சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார். இதையடுத்து பாண்டி தனது மனைவியின் தங்கையான பாண்டியம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவருடைய இரண்டு மகன்களும் கண்டித்துள்ளனர். பாண்டியம்மாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவரும் சில நாட்களுக்கு முன் இறந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்கள் தனியாக இருக்கும் போது வந்த இரு மகன்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.