நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து, துபாய்க்கு விமானம் கிளம்பியுள்ளது. ஆனால் அப்போது விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாகவும், மீண்டும் காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் சில நிமிடங்கள் கழித்து நேபாள விமானப் போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில், திட்டமிட்டபடி போயிங் ரக விமானம் துபாய் நோக்கி புறப்பட்டதாக தெரிவித்துள்ளது.