அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை... சிக்கிய 12 பக்க கடிதம் - தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
- தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே 8 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றியதால் மனமுடைந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- பொம்மிடியை அடுத்த பி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த அருண் பிரசாத், அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
- பள்ளியில் இருந்து மதியம் வீடு திரும்பிய அருண் பிரசாத், தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
- தகவல் அறிந்து வந்த பொம்மிடி போலீசார், அருண் பிரசாதின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வீட்டில் அருண் பிரசாத், 12 பக்கங்களில் எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு வீட்டு மனை நிலம் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த நாமக்காரர் எனும் சிவசங்கர் குடும்பத்தினர்தான் தனது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். வீ
- ட்டுக்கு அருகே இருந்த மற்றொரு இடத்தை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்திய சிவசங்கர், 8 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, இடத்தை எழுதிக் கொடுக்காமல், மிரட்டி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
- இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.