"மாசம் மாசம் எஸ்.பி ஆபிஸ்க்கு ரூ.15000 லஞ்சம் தரேன்"- போலி மருத்துவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு
- தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார்.
- வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தேவி என்பவர், 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வெங்கடசமுத்திரம் நான்கு ரோடு பகுதியில் சக்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமணை நடத்தி வந்துள்ளார்.
- இது குறித்த புகாரைதொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகளின் சோதனையில், அவர் போலி மருத்துவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது .
- இதனையடுத்து தேவி மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இதனிடையே, மாதம் மாதம் எஸ்பி அலுவலகத்திற்கு 15 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாகவும் அதற்கு ரசீது உள்ளதாகவும் போலி மருத்துவர் தேவி பேசும் ஆடியோ வலை தளங்களில் பரவி வருகிறது.