ரயில்வே போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்
வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் நுழைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, பொருட்களை பறி கொடுத்தவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பவேரியா, பார்த்தா போன்ற வடமாநில கொள்ளையர்கள் தமிழகத்திற்கு வராத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.