டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | DGP | ChennaiHC | CV Shanmugam
- அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- அதில், கடந்த 2006ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
- பாதுகாப்பு விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் டிஜிபிக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
- அப்போது, பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.