பாபர் மசூதி இடிப்பு.. சர்ச்சை கருத்து.. அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு

Update: 2022-12-07 14:52 GMT

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது கோவை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார், அர்ஜுன் சம்பத் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல், அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக கருத்து பதிவிட்ட தடா ஜெ ரஹீம் மீதும் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தனது டுவிட்டர் பக்கத்தில் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள், இந்துக்களின் வெற்றித் திருநாள். அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டிட சபதமேற்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிராக தடா ஜெ ரஹீம் கருத்து பதிவிட்டதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்