வெள்ளத்துக்கு கீழே டெல்லி - தலைநகர் தலையில் விழுந்த பேரிடி

Update: 2023-07-13 10:20 GMT

இடைவிடாது பெய்து வரும் கனமழையால் யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் ஒத்துழைப்பு தர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்...டெல்லியில் கனமழை காரணமாகவும், ஹரியானா மாநிலத்தில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெயியேற்றப் படுவதாலும் யமுனை நதிக்கரையின் இருபுறங்களிலும் நீர்மட்டம் உச்ச வரம்பை எட்டியுள்ளது. தற்போது நீர்மட்டம் 208.46 அடியாக உள்ளது. 1978க்குப் பிறகு இதுவே அதிகபட்ச அளவாகும். இதனால் யமுனையைச் சுற்றி உள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிகிறது. இதனால் அந்த வழித்தடங்களில் செல்ல வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவு வாயிலாக பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களின் உயிரைக் காப்பாற்றுவது மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், இந்த அவசர சூழ்நிலையில் சாத்தியமான எல்லா வழிகளிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒத்துழைக்க டெல்லி மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் வெள்ள பாதிப்புள்ள அனைத்து பகுதிகளிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்