தலைநகர் டெல்லியில் தொடரும் கொடூரம்... விளையாடிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமியை மர்ம நபர் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால்ஸ்வா டைரி பகுதியில் புதன்கிழமை மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால், போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், அடுத்த நாள் அருகில் உள்ள பூங்காவில் சிறுமி மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுமியை ஒருவர் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, டெல்லி போலீசுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.