தாய் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு..!

Update: 2023-05-19 14:39 GMT

ஸ்ரீபெரும்புதூரை அடுத்து உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்மிதா.இவர் மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சுஷ்மிதா வீட்டின் அருகே நின்று தனது காதலனுடன் பேசி கொண்டிருந்தாக கூறப்படுகிறது, இதனை பார்த்த அவரது தாயார் கடுமையாக கண்டித்து இருக்கிறார். இதனால் மனமுடைந்த, சுஷ்மிதா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேகமடைந்து அவரது அறையை தாயார் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்து இருக்கிறார். உடனடியாக சுஷ்மிதாவை ஸ்ரீபெரும்புதுரர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்