"திருமணத்துக்கு முன்பே விவகாரத்து டீல்" - அமேசான் ஓனரின் ஸ்மார்ட் மூவ்..!

Update: 2023-06-01 05:22 GMT

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், திருமணம் செய்வதற்கு முன்பு, காதலியுடன் செய்துள்ள விவகாரத்து ஒப்பந்தம் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 14,500 கோடி டாலராக உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 11.99 லட்சம் கோடி ரூபாய். 59 வயதாகும் ஜெஃப் பெசோஸ், 53 வயதான லாரென் சான்செஸ் என்ற தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை திருமணம் செய்ய உள்ளார்.இவர்களின் திருமண நிச்சயதார்த்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்பே விவகாரத்து குறித்து இருவரும் ஒரு சட்ட ரீதியான ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதற்கு காரணம், அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில், விவாகரத்து சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளன. ஆணின் சொத்தில் பாதிக்கும் அதிகமான அளவு பெண்களுக்கு பிரித்து கொடுக்க வகை செய்கின்றன. ஜீவனாம்சமாக ஆண்டு தோறும் பெரிய தொகை அளிக்க வேண்டியிருக்கும்.ஜெஃப் பேசோஸின் முதல் மனைவியான மெக்கென்ஸ்கி ஸ்காட்டை, 2019ல் விவகாரத்து செய்து போது, 3.14 லட்சம் கோடி ரூபாய் அளவு சொத்தை அவருக்கு பிரித்து அளிக்க வேண்டியிருந்தது.இதன் விளைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு சரிந்தார் ஜெஃப் பேசோஸ். அவரின் முன்னாள் மனைவி மெக்கென்ஸ்கி ஸ்காட் அமெரிக்காவின் பெண் கோடீஸ்வர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இத்தகைய பிரச்சனைகளை சமாளிக்க, சமீப வருடங்களில், திருமணத்திற்கு முன்பே விவாகரத்து தொடர்பான ஒப்பந்தங் களை பல தம்பதியினரும் சட்டப்படி செய்து கொள்கின்றனர்.திருமணத்திற்கு பின், விவாகரத்து செய்ய வேண்டியிருந்தால், கணவனின் சொத்தில் மனைவிக்கு அளிக்க வேண்டிய பங்கின் அளவு மற்றும் ஜீவனாம்ச தொகை பற்றி ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். சட்ட ரீதியான அளவை விட இது குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸ், லாரென் சான்செஸ் தம்பதியினரை போல பல்வேறு பிரபல தம்பதிகளும் திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தம் செய்துள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மூன்றாவது மனைவியான மெலனியா டிரம்ப் இத்தகை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர்.பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பர்க் மற்றும் அவரின் மனைவி பிரிசில்லா சென் தம்பதியினரும் இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்