மகளின் சக மாணவருக்கு விஷம் கொடுத்த சம்பவம்... மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்த கோரிக்கை - அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்த கோரி, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் சில மாதங்களுக்கு முன்பு, தனது மகளுடன் படித்த சக மாணவனுக்கு விஷம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே அவர்களை மீண்டும் பணியமர்த்த கோரி, காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பணியை புறக்கணித்து, கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.