வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.
இதனால் பனிப்பாறைகள் உருகுவதால் கடல் மட்டம் அதிகரிக்க, இமயமலை போன்ற பனிமலைகள் வெடிப்பால் திடீர் பெருவெள்ளம் ஏற்படும் அச்சமும் நிலவுகிறது.
இந்த சூழலில் உலகம் முழுவதும் பனிப்பாறைகள் ஆபத்தான நிலையில் உருகி வருவதாக நேச்சர் கம்யூனிகேஷன் இதழ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்றரை கோடி மக்கள் ஆபத்தில் உள்ளதாகவும், இதில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் உள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு பனிப்பாறை வெடிப்பால் ஏற்படும் வெள்ளத்தினால் பாதிப்பு நேரிடலாம் எனவும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.