அமெரிக்க சர்வரில் சைபர் தாக்குதல்...? - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட 900 விமானங்கள்

Update: 2023-01-12 03:08 GMT

அமெரிக்காவில் விமான போக்குவரத்து சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அமெரிக்காவி ல் நாடு முழுவதும் திடீரென விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்நாட்டு தேசிய விமான கட்டுப்பாட்டு அறை சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விமானத்தின் பாதையில் ஆபத்து விளைவிக்கும் சாத்தியக்கூறுகள், விமானநிலையத்தில் உள்ள வசதிகள், அங்கு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விமானிகளுக்கு எச்சரிக்கும் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இதனால் 4 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், 900-த்திற்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து சில மணி நேரங்களில் கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், விமானங்களை இயக்கலாம் எனவும் அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு சைபர் தாக்குதல் காரணமா? என்பதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. விமான சேவை பாதிக்கப்பட்டதால் அமெரிக்கா முழுவதும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்